(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைவாக வெளிநாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவரும் பணியும் சர்வதேச நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
அரபு நாடுகளில் 32ம் வரையிலானவர்களும் பசுபிக் வலையத்தில் 7800 பேரும், தெற்காசிய நாடுகளில் 3100 பேரும், கிழக்கு ஆசிய நாடுகளில் 3300 பேரும், 30,200 பேர் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வர விண்ணப்பித்திருந்தனர். வட அமெரிக்காவில் இருந்து 1442 பேரும், ஆபிரிக்க நாடுகளில் இருந்து 479 பேரும், லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து 62 பேரும் 82 பேர் ஏனைய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வர விண்ணப்பித்திருந்தனர்.
இதேவேளை, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சிலரை அழைத்துவருவதற்கான சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக அரசாங்கம் செயல்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM