சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் வாகன பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வாகன பேரணி, இன்று நான்கு பிரதான வீதிகள் ஊடாக கொழும்பு நகரிற்குள் வந்துள்ளது.
 இந்நிலையில், வாகன பேரணியில் வந்த அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினர், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.