வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.

இன்று (04) காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதனை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் வவுனியா உக்கிளாங்குளம் பகுதியை  சேர்ந்த நபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.