24 வருட காலமாக  தீர்க்கப்படாதுள்ள அதிபர்கள் மற்றும்  ஆசிரியர்களது சம்பள முறன்பாட்டை உடன் தீர்க்குமாறு கோரிக்கை விடுத்து  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் கண்டி நகரிலிருந்து கொழும்பு வரை பாரிய பாத யாத்திரை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.    

இன்று புதன் காலை கண்டி மத்திய சந்தைக்கு முன் ஆரம்பித்த இப் பாத யாத்திரை  மாவனெல்லையில் முடிவடையும். வியாழக்கிமை கலிகமுவ நகர் வரை  பாத யாத்திரை செல்ல உள்ளது. 

இவ்வாறு எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு வந்தடையும் வகையில் இது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  

பாத யாத்திரையில் செல்லும் அதிபர் ஆசிரியர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மகஜர் ஒன்றையும் கையளிக்க உள்ளனர்.