டெங்கு நுளம்புகளை கண்டறியும் பொலிஸ் மோப்ப நாய்கள்..!

Published By: J.G.Stephan

04 Aug, 2021 | 02:08 PM
image

(எம்.மனோசித்ரா)
நீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக  மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி மற்றும் ரொமா என்ற மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் வெற்றிகரமாக நுளம்பு காணப்படும் இடங்களை இனங்கண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் டெங்கு  ஒழிப்பு தொடர்பில் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் இந்த மோப்ப நாய்களைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும்  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொலிஸாரால் நீண்ட காலமாக விசாரணை நடவடிக்கைகளில் மோப்ப நாய்கள் உபயோகிக்கப்படுகின்றன. இலங்கை பொலிஸிலுள்ள சுமார் 200 மோப்ப நாய்களால் பெருமளவான விசாரணைகளின் போது நன்மைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக குற்ற விசாரணை , சந்தேகநபர்களை இனங்காணல் , வெடிபொருட்களை இனங்காணல், போதைப்பொருட்கள் காணப்படுகின்ற இடங்களை இனங்காணல் உள்ளிட்ட வெவ்வேறு செயற்பாடுகளில் மோப்ப நாய்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுகிறது.

சில பிரதேசங்களில் பெரும்பாலான பகுதிகள் தூய்மையற்றவையாகக் காணப்படுவதால் நுளம்பு பெருக்கம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. எனவே நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

குறிப்பாக கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி மற்றும் ரொமா என்ற மோப்ப நாய்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் குறித்த இரு மோப்ப நாய்களும் வெற்றிகரமாக நுளம்பு காணப்படும் இடங்களை இனங்கண்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42
news-image

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு...

2023-12-06 19:49:32
news-image

மோசடி இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக...

2023-12-06 19:52:54