செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

Firefighters inspect the mangled end of a train carriage. Its wheels are badly bent out of shape and the carriage appears to have been obliterated by the crash which occurred at 8am Wednesday outside the village of Milavce close to the Czech Republic's German border

ஜேர்மன் எல்லையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ள மிலாவ்ஸ் கிராமத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 8.00 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தினையடுத்து அண்டை நாடான ஜேர்மனியில் இருந்து ஆம்பியூலன்ஸ் உட்பட மீட்புக் குழுக்கள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு சேர்த்தன.

காயமடைந்தவர்களில் ஏழு பேரின் நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

வேகமாக வந்த ரயில் மற்றைய ரயிலின் முன்பக்கத்தில் மோதியதா அல்லது பின்புறத்தில் மோதியதா என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

Firefighters are seen around the mangled end of one of the train carriages involved in the collision in the town of Milavce in the southwest of the Czech Republic