ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

முக்கிய சர்வதேச பயண மையமான வளைகுடா அரசு, ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் போக்குவரத்து விமானத் தடையை இரத்து செய்வதாகக் செவ்வாயன்று கூறியது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, நேபாளம், இலங்கை மற்றும் உகாண்டா மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்.

செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் இந்த புதிய அறிவிப்புகளுக்கு அமைவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கலாம்.

பயணத்திற்கு முன் பயணிகள் ஆன்லைன் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை பி.சி.ஆர். சோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.