ஜனாதிபதியின் கொள்கையை நிதி அமைச்சர் பஷில் மாற்றியமைத்தது ஏன்?: ஹர்ஷடி சில்வா

Published By: J.G.Stephan

04 Aug, 2021 | 12:28 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதியின் இரசாயன உர இறக்குமதி தடையை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நீக்கியுள்ளமை ஏன்? ஜனாதிபதியின் கொள்கைத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதா என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கையொப்பத்தில் சகல வங்கிகளுக்கும் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விடயமானது, இதுவரை காலமாக தெரிவு செய்யப்பட்டிருந்த வெவ்வேறு இரசாயன உரம் இறக்குமதி தடையானது ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதிப்பத்திரத்தின் மூலமாக இராசாயன உரம் இறக்குமதி செய்ய முடியும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதி இறக்குமதி சட்டத்திற்கு அமைய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து அரசாங்கம் பதில் கூறவேண்டும்.

இரசாயன உர இறக்குமதி தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தீர்மானம் ஒருபோதும் மாற்றியமைக்கப்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியாக தெரிவித்துள்ளார். ஆனால், ஜனாதிபதியின் தீர்மானத்தை மாற்றியமைத்துளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24