ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (04) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். 

May be an image of one or more people, people standing and indoor

இன்று மு.ப. 11.15 மணியளவில் பாராளுமன்ற வளாகத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி, சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் வரவேற்று சபை மண்டபத்துக்குள் அழைத்துவந்தனர்.  

அதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன்  ஜனாதிபதி சபைக்கு வருகைதந்தார்.

May be an image of 2 people, people sitting, people standing, indoor and text that says '©Parliament of Sri Lanka'

சபையில் உறுப்பினர்களின் வாய்மூல விடைகான கேள்விகள் மற்றும் அதற்கான பதிலளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி நண்பகல் 12.00 மணிவரை சபையில் இருந்தார். 

சபையில் இருந்த வேளையில் ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளும்  கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பர்னாந்து ஆகியோருடன் உறையாடிக்கொண்டிருந்ததை காணக்கூடியதாக்க இருந்தது.