(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ரிஷாத் பதியுதீனுக்கும் பிள்ளைகள் உள்ளது. அவர்களுக்கு பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா? அவர்களின் வீட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றது என்பது தெரிந்துகொண்டும் எப்படி அவரால் இருக்க முடிந்தது என சபையில் கடுமையாக சாடிய ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, ஹிசாலினியின் மரணத்திற்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக்கூறியாக வேண்டும் எனவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அப்பாவி சிறுமி ஒருவரின் மரணம் இன்று நாட்டில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது, அந்த சிறுமி எவ்வாறு இறந்தார் என்பதை எமக்கு தெரியவில்லை. ஆனால் சர்வதேச ரீதியிலும் இது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் காரணியாகும். சிறுவர் வன்கொடுமைகள் நிறுத்தப்படும் ஆண்டாக இந்த ஆண்டு உள்ள நிலையில் இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் பணிக்கு அமர்த்துதல் ஒரு பேரலையாக தாக்கிக்கொண்டுள்ளது. இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.
ஹிசாலினியின் மரணம் குறித்த விசாரணைகள் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் குற்றவாளிகள் மட்டுமல்ல குறித்த சிறுமியின் பெற்றோரும் தப்பிக்க முடியாது. ஹிசாலினி பணிக்கு அமர்த்தப்படும் வயதில் இல்லை என்பதை தெரிந்தும் அவரை பணிக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறாகும். எனவே அவர்களும் தப்பிக்க முடியாது. நாட்டில் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இவற்றை தடுக்க கடுமையான சட்டதிட்டங்களை கொண்டுவர வேண்டும். சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அதற்கே நாம் இங்கு இருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM