டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
ஜப்பானில் உள்ள இப்ரகி மாகாணத்தின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 6,0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஏற்பட்ட குறித்த நில அதிர்வினை அங்குள்ள அனைவராலும் உணரக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்பத்தின் மையப்பகுதி ஜப்பானின் கடற்கரையிலிருந்து 40 கி.மீ அல்லது 25 மைல் ஆழத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் பூகம்பங்களுக்கு அந்நியமானதல்ல, ஏனெனில் நாடு மூன்று தகடுகளை ஒன்றிணைக்கும் டெக்டோனிக் தகடுகளுக்கு மேல் உள்ளது. டெக்டோனிக் தகடுகளில் ஒன்று மாறும்போது, நிலநடுக்கம் ஏற்படலாம்.

ஜப்பானிய அதிகாரிகள் குறிப்பாக டோக்கியோவின் ஒலிம்பிக் மைதானங்களை பூகம்பங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒலிம்பிக் போட்டிகளின் கரப்பந்தாட்ட அரங்கில் "அதிர்ச்சியை உறிஞ்சும் மாபெரும் இறப்பர் மெத்தைகள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் ஒலிம்பிக் கிராமம் கடல் சுவர்களால் பாதுகாக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.