ஐக்கிய அரபு இராஜ்ஜிய வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்றை ஈரானிய ஆதரவு படைகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

மூன்று கடல் பாதுகாப்பு ஆதாரங்களுடன் பிரிட்டனின் கடல் வர்த்தக நிறுவனம் செவ்வாய்க்கிழமை இந்த கடத்தல் நடவடிக்கையினை உறுதிப்படுத்தியுள்ளது.

பனாமா - கொடியேற்றப்பட்ட 'The MV Asphalt Princess' என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக இரண்டு ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

எனினும் ஈரானிய புரட்சிகர காவலர்கள், தங்கள் படைகள் அல்லது கூட்டாளர்கள் இது போன்றவொரு கடத்தல் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்று கூறினர்.

குறித்த குற்றச்சாட்டுகள் தெஹ்ரானுக்கு எதிரான விரோத நடவடிக்கைகள் என்றும் கூறினர்.

ஈரான் வெளியுறவு அமைச்சகம் முன்னதாக செவ்வாயன்று ஐக்கிய அரபு இராஜ்ஜிய கடற்கரை அருகே பல கப்பல்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு சம்பவங்கள் பற்றிய அறிக்கைகள் "சந்தேகத்திற்குரியவை" என்று கூறியது.

ஓமானின் கடற்கரையில் இஸ்ரேல் நிர்வகித்த கப்பல் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டதாலும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் குற்றம் சாட்டியதாலும் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.