டோக்கியோ ஒலிம்பிக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 68 கிலோ கிராம் ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப் தமிரா மென்சா-ஸ்டாக்  தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நைஜீரியாவின் பிளஸ்ஸிக் ஒபோருடுடுவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து அவர் இந்த வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தத்தில் முதல் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க கறுப்பின வீராங்கனையாகவும், இரண்டாவது அமெரிக்கப் பெண்ணாகவும் இவர் பதிவானர்.

தமிரா மென்சா-ஸ்டாக் தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றதை கொண்டாடியபோது, அவரது வெற்றி அமெரிக்காவில் உள்ள கறுப்பினப் பெண்களை மல்யுத்தத்தை கருத்தில் கொள்ள ஊக்குவிக்கும் என்று நம்பினார்.

2016 ஆம் ஆண்டில் 53 கிலோ கிராம் மல்யுத்தத்தில் ஜப்பானின் சவோரி யோஷிடாவை தோற்கடித்து, ஹெலன் மரோலிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டில் அமெரிக்காவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த பெண்ணாக பதிவானார்.