விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

நேற்றைய தினம் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையிலேயே அவர் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமான முடிவினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில் தற்சமயம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர், இன்றைய தினம் பி.சி.ஆர். பிரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.