தொழினுட்பத்தில் துள்ளி விளையாடும் இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் உலகில் எங்கையாவது ஒரு பகுதியில் விந்தையான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

இன்றைய உலகில் சிறுவர் முதல் முதியவர் என ஆண் பெண் இருபாலாரும்,  தமது அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்கு ஏற்றாபோல் உலக சந்தைகயில் இலட்ச கணக்கான அழகுசாதன பொருட்களும் பரந்து கிடக்கின்றன.

இவற்றில் சில பொருட்கள் நன்மையளிப்பதாக இருந்தாலும் பெரும்பாலானவை தீங்கு விளைவிக்க கூடியவையாகவே உள்ளன.

இந்நிலையில் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று வியக்கவைக்குமளவிற்கு கிரீம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த கிரீம் இன்னும் சந்தைக்கு வராத நிலையில் இந்த கிரீம் பல நபர்களின் ஊடாக பயன்படுத்தப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது.

குறிப்பாக இந்த கிரீம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை இல்லாமல் செய்வதற்கே உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த கிரீமை முகத்தில் தடவி ஒரு சில நிமிடங்களில் முகத்தில் உள்ள சுருங்கங்கள் மறைந்து இளமையான தோற்றதை ஏற்படுத்துகின்றது.

தற்போதைக்கு 10 மணி நேரம் மாத்திரமே இந்த பிரதிபலிப்பு நீடிக்கின்றது. அதன் பின்னர் வழமைபோன்று முகம் மாறி விடுகின்றது.

எனவே குறித்த கிரீம் மூலம் நீடித்த பயனை பெறுவதற்கு அவுஸ்திரேலிய நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

மிக விரைவில் இந்த கிரீம் உலக சந்தைகளுக்கு வரவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளதோடு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் எனவும் தெரிவித்துள்ளது.