திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனாவால் முதல் நபர் உயிரிழப்பு 

Published By: Digital Desk 4

03 Aug, 2021 | 09:20 PM
image

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதல் முதலாக 60 வயதுடைய ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் வி. மோகனகாந்தன் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் பிரதேசத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பிரதேசத்தில் 1526 தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதுடன் தொடர்ந்து 200 பேர் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்; திருக்கோவில் பிரதேச சுகாதார அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றினால் இதுவரை ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இருந்தபோதும் இன்று கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்தார். எனவே  தடுப்பூசி மூலம் தாக்கத்தை குறைக்கலாமே தவிர நோய் தொற்று ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது.   

எனவே நாங்கள் தடுப்பூசி ஏற்றிவிட்டோம் என இறுமாப்புடன் தேவையற்ற விதத்தில்  தேவையற்ற ஒன்று கூடல் மற்றும் வீதியில் நடமாடுதல் களியாட்டங்கள் திருவிழாக்கள் போன்றவற்றில் கலந்து கொள்வதை தவிர்த்து தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை மிக  இறுக்கமான முறையில்  கடைப்பிடித்து எமது பிரதேசத்தை மீண்டு வழமையான நிலைமைக்கு கொண்டுவர  ஒத்துழைப்பு வழங்குமாறு  கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43