எட்டாவது தடை தாண்டலை பாய மறுத்த குதிரை: குதிரையேற்றத்திலும் இலங்கைக்கு பின்னடைவு..!

By J.G.Stephan

03 Aug, 2021 | 05:30 PM
image

- டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் -

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் இலங்கை சார்பாக மடில்டா கார்ல்சன், இன்று பங்கேற்றார். இலங்கையில் பிறந்து சுவீடன் நாட்டு பெற்றோர்களால் வளர்க்கபட்ட கார்ல்சன் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்றத்தல் இலங்கை சார்பாக பங்கேற்றார். மொத்தம் 75 குதி‍ரையேற்ற வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 13ஆவது வீரராக மடில்டா கார்ல்சன் தனது குதிரையுடன் களமிறங்கினார்.

கார்ல்சனின் சொற்படி ஆரம்பத்தில் பாய்ந்த குதிரை, எட்டாவது தடை தாண்டலின் போது குதிரை பாய மறுத்தது. இதனால் கார்ல்சன் தோல்வியைத் தழுவிக்கொண்டு களத்திலிருந்து வெளியேறினார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் இலங்கையின் இறுதி வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right