சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவை நம்புமளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை - விக்னேஸ்வரன்

Published By: Digital Desk 4

05 Aug, 2021 | 10:29 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.

சிங்கள புத்திசாலி மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம், ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை.

அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

அரசாங்கம் யுத்தமொன்றை எதிர்பார்த்தா பாதுகாப்பு அமைச்சிற்கு அதிகளவு நிதி  ஒதுக்கியுள்ளது - விக்கினேஸ்வரன் | Virakesari.lk

பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, எமது முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து, புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள புத்திசாலி சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.நாட்டின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளும் விதத்தில் கைகொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது அரசாங்கத்திற்கும், சிங்கள புத்திசாலி மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை, அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது.

எனவே சிங்கள புத்திசாலி மக்களை தமிழ் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே நாட்டின் நெருக்கடி நிலையில் இருந்து மீள ஒரே வழிமுறையாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42