(இராஜதுரை ஹஷான்)
சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில் எதிர்க்கட்சியினரும், மலையக அரசியல்வாதிகளும் இரட்டைவேடம் போடுகிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இடை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி மரணித்த 16 வயது சிறுமியின் விவகாரம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இச்சிறுமியின் மரணத்தை தொடர்ந்து பல விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் தரப்பினருக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
ரிஷாத் பதியுதீன் உட்பட அவரது தரப்பினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அவர் பதவி வகித்த அமைச்சுக்கு சொந்தமான அரச இல்லம் தொடர்பிலும் தற்போது சர்ச்கை எழுந்துள்ளது. ஆகவே பொறுப்பான எதிர்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கட்சியில் இருந்து தற்காலியமாகவாவது இடை நிறுத்த வேண்டும். இவ்விடயம்குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஏன் கவனம் செலுத்தவில்லை.
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் பாராளுமன்றில் வாதபிரதிவாதம் இடம் பெறுகையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜ்புர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக உரையாற்றினார்.
இதற்கு எதிர்தரப்பில் உள்ள மலையக அரசியல்வாதிகள் கைத்தட்டி ஆதரவு வழங்கினார்கள். பிறகு வெளியில் ஊடகங்களுக்கு மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இவ்விடயத்தில் எதிர்க்கட்சியினரும், எதிர்தரப்பில் உள்ள மலையக அரசியல்வாதிகளும் இரட்டை வேடம் போடுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM