வடக்கில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர்

By Digital Desk 2

03 Aug, 2021 | 01:30 PM
image

வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர்.

இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் இன்றுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 62.09 சதவீதமாகும்.

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 67.54 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 63.70 சதவீதமானோர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் முறையே 3,4,5ஆம் இடங்களில் உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right