பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை சிமானுஸ்காயாவுக்கு போலாந்தின் மனிதாபிமான விசா

Published By: Vishnu

03 Aug, 2021 | 12:24 PM
image

பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை கிரிஸ்டினா சிமானுஸ்காயாவுக்கு போலாந்து அரசாங்கத்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் திங்களன்று உறுதிபடுத்தினார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான சிமானுஸ்காயா  ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர் பின்னர் ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பை நாடியதுடன், திங்களன்று ஜப்பானின் தலைநகரில் உள்ள போலந்தின் தூதரகத்திற்கு சென்றார்.

தூதரகத்தில் டோக்கியோவில் உள்ள போலந்து இராஜதந்திரிகளுடன் சிமானுஸ்காயா நேரடியாக தொடர்புகளை பேணி கலந்துரையாடிய பின்னர், அவருக்கு மனிதாபிமான விசா அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக போலாந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரைடாக்ஸ் கூறினார்.

அத்துடன் சிமானுஸ்காயா விளையாட்டு வாழ்க்கையை தொடர போலாந்து தன்னாலான தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்