டுவிட்டர் நிறுவனம் தனது தளத்தில் போலித் தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு இரண்டு மிகப்பெரிய செய்தி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.

அதன்படி, டுவிட்டர் நிறுவனம் சர்வதேச செய்தி வழங்குநர்களான ரொய்ட்டர்ஸ் (Reuters) மற்றும் அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவுள்ளது. ஆரம்பத்தில் ஆங்கில மொழி உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும்.

இந்நிலையில், அதிக அளவு டுவீட்களை உருவாக்கும் நிகழ்வுகளின் சூழல் மற்றும் பின்னணி பற்றிய தகவல்களை  குறித்த செய்தி நிறுவனங்கள் டுவிட்டருக்கு வழங்கவுள்ளது. 

இதன் மூலம் தவறான தகவல்களை பரவுவதை  தடுக்க முடியும்  என டுவிட்டர் நம்புகிறது. தளத்தில் இருந்து தவறான உள்ளடக்கத்தை நீக்க மீண்டும் அழுத்தம்  கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மைகள் சர்ச்சையில் இருக்கும்போது துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்கள் விரைவாகக் கிடைப்பதை உறுதிசெய்ய இந்த முயற்சி உதவும் என டுவிட்டர் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் தொடர்பாளர் கூறுகையில்,

டுவிட்டர் தனது தளத்தில் துல்லியமான தகவலை ஊக்குவிக்க செய்தி நிறுவனங்களுடன் கைக்கோர்த்தது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், டுவிட்டர் பேர்ட்வாட்சை (Birdwatch) அறிமுகப்படுத்தியது, இது ஒரு புதிய சமூக-நடுநிலை அமைப்பாகும், இது தன்னார்வலர்கள் தவறான ட்வீட்களை கண்டறிந்து லேபிளிடுவதற்கு உதவுகிறது.

டுவிட்டர் இரண்டு போட்டி செய்தி நிறுவனங்களுடன் தனித்தனியாக வேலை செய்யும், ஆரம்பத்தில் ஆங்கில மொழி உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும்.

ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் ஆகிய இரண்டும் செய்தி நிறுவனங்களும் பேஸ்புக்கில் உண்மைத்தன்மையினை கண்டறிவதில் பணிபுரிகின்றன.

டுவிட்டர் விதிகளை மீறுகிறதா என்பதை தீர்மானிக்க அதன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கள் செய்யும் வேலையில் இருந்து இந்த வேலை சுயாதீனமாக இருக்கும் என டுவிட்டர் மேலும் கூறியது. 

இந்த குழுக்களின் வேலை செய்திகளை திரிபு படுத்தும் ஊடகம் , தேர்தல் பற்றிய போலி தகவல்கள் மற்றும்   தளங்களின் விதிமுறைகளை மீறும்  ஊடகங்களைக் கொண்ட பதிவுகளை லேபிளிடுதல்.

நியூயோர்க் பல்கலைக்கழகம் ஸ்டெர்னின் 2020 அறிக்கையின் படி, டுவிட்டர் உலகளாவிய ரீதியில் நாளாந்த 199 மில்லியன் பயனர்களுக்கு சுமார் 1,500 மதிப்பீட்டாளர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.