அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் வசிப்போர் அச்சமடையத் தேவையில்லை.

இந்த தகவல் அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் ஸ்தானங்களுடன் கலந்தாலேசித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரின் தென்கிழக்கில் 310 கி.மீ (190 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியது.

நில நடுக்கத்தின் ஆழம் 40 கி.மீ அகும்.