- டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் -
டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் இலங்கை பங்கேற்கும் இறுதிப் போட்டியான குதிரையேற்ற போட்டி நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதிபெற்ற முதல் இலங்கை வீராங்கனையான மடில்டா கார்ல்சன் இன்று இலங்கை கொடியுடன் குதிரைமேல் அமர்ந்து களம் காணவுள்ளார்.
இலங்கை பெற்றோருக்குப் பிறந்து, பின்னர் சுவீடன் நாட்டவர்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட மடில்டா கார்ல்சன், தற்போது ஜேர்மனில் வசித்து வருகின்றார். ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கை முதன் முறையாக குதிரையேற்றப் போட்டியில் பங்கேற்கின்றது. அதுவும் நேரடி தகுதிபெற்று போட்டியில் கலந்துகொள்கின்றது.
டோக்கியோ ஈக்வெஸ்ட்ரியன் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்ப சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இதில் 13ஆவது வீராங்கனையாக தனது குதிரையுடன் களமிறங்குகின்றார் மடில்டா கார்ல்ஸன். இந்தச் சுற்றில் 75 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று மதிப்பெண்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.
மடில்டா கார்லன் 1984ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி கண்டியில் பிறந்தார். அவருக்கு மூன்று மாத வயதாக இருந்தபோது, அவளது இலங்கை பெற்றோர்கள் சுவீடன் தம்பதியினருக்கு மடில்டாவை தத்துக்கொடுத்துள்ளனர்.
மடில்டாவுடன் போட்டியிடும் குதிரையின் பெயர் சோபின். இது 12 வயதாகும் ஆண் குதிரையென்பதும் குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM