அனைவருக்கும் வுஹான் நகரில் கொரோனா பரிசோதனை

Published By: P. Saranya

03 Aug, 2021 | 03:26 PM
image

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்தில் அனைவருக்கும்  கொரோனா வைரஸ் பரிசோதனை மேற் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தற்போது  ஒரு மாதத்தில்  மிகப் பெரிய கொரோனா வைரஸ்  பரவலை கண்டறிந்துள்ளது.  10 நாட்களில் 300 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சீன முழுவதும் 15  மாகாணங்களில் கொரோனா வைரஸ்  பரவியுள்ளது. இதன் காரணமாக சீன அரசாங்கத்திற்கு பரந்தளவிலான பரிசோதனை நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டியுள்ளது.

வைரஸ் பரவலுக்கு உருமாறிய டெல்டா வைரஸ் மற்றும் உள்நாட்டு சுற்றுலா காலம் கரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில்  செவ்வாய்க்கிழமை 90 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவற்றில் 61  பேர் உள் நாட்டு தொற்றாளர்கள் பதவாகியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணை குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவில் வுஹான் நகரத்தில் அனைத்து மக்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு 7 உள்நாட்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவை ஒரு வருடத்திற்கும் மேலாக முதல் முறையாக பதிவான உள்நாட்டு தொற்றுக்கள் ஆகும்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வுஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் முதன்முதலாகப்  பரவியதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டின் பெரும்பகுதியிலும் சீனா தனது எல்லைக்குள் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்தது.

இருப்பினும், மீண்டும் வைரஸ் பரவியமை சீனாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் நாஞ்சிங்கில் 9.2 மில்லியன் குடியிருப்பாளர்களை மூன்று முறை பரிசோதனை செய்து   ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளனர்.

புதிய வைரஸ் பரவல் தலைநகர் பீஜிங்கையும் அடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஹெலிகொப்டர்...

2026-09-16 16:06:21
news-image

இந்திய போர்க்கப்பல் மீது மோதிய பாகிஸ்தான்...

2026-09-16 14:35:20
news-image

மக்காவை இலக்குவைத்ததற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்களை கண்டித்து...

2026-09-16 14:21:34
news-image

சக்கரம் கழன்றதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...

2026-09-16 11:54:31
news-image

தங்க அரோவானா மீனைப் போன்று வடிவமைக்கப்பட்ட...

2026-09-15 14:40:32
news-image

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2...

2026-09-15 12:18:53
news-image

கொங்கோ பாடசாலையில் பயங்கர தீ! ;...

2026-09-15 11:31:00
news-image

லிபியாவின் மிஸ்ராதா விமான நிலையத்தில் தனியார்...

2026-09-15 10:37:54
news-image

ஈரானில் சிரேஷ்ட மதகுரு மௌவி யூசுப்...

2026-09-15 11:22:35
news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20