அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கையர்கள் அவதானம்!

By Vishnu

03 Aug, 2021 | 10:46 AM
image

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரின் தென்கிழக்கில் 310 கி.மீ (190 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நில நடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் இலங்கையை சுற்றியுள்ள கடற்கரையை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right