தியோபாண்டி குழுக்களினால் ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தி அமீரகமாக மாற்றுவதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நாடு முழுவதும் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதே  பாரிய நோக்கம் என்று ஆப்கான்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், சமூக ஊடகங்களில் பரவும் குழப்பமான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மக்களை சித்திரவதை செய்வதையும் காட்டுகின்றன. கடந்த மே மாதம் சர்வதேச துருப்புக்கள் ஆப்கானிஸ்தான் விட்டு வெளியேறத் தொடங்கிய பின்னர் தீவிரவாத குழு ஆப்கானில் பல பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அமெரிக்கா மற்றும் ஐ.நா தலிபான்களை சர்வதேச தனிமைப்படுத்தல்  மற்றும் பயணத் தடைகள் குறித்து எச்சரித்திருந்தது. ஒருதலைப்பட்சமாக காபூலின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற இஸ்லாமியக் குழுக்களின் தலைமைகள் அண்டைய நாடான பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்தனர். 1996 ஆம் ஆண்டிலிருந்து மாற்றத்தை ஏற்றுக்கொள்ள இந்த குழுக்கள் விரும்ப வில்லை.

கடந்த காலங்களிலும், தாலிபான்கள் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான விளக்கத்தை அமுல்படுத்தினர். இதில் கசையடி மற்றும் கல்லெறிதல் ஆகியவை அடங்கும். பெண்கள் தங்கள் உடலையும் முகத்தையும் பர்தாவில் மறைக்க வேண்டும் . பள்ளி அல்லது வேலைக்கு செல்லவோ அல்லது ஆண் உறவினர் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.