பாராளுமன்ற அமர்வு இன்று (03) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

காலை 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மு.ப. 11.00 முதல் மாலை 05.30 மணிவரை சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறும்.