நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 422,472 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கோவிஷீல்ட் திட்டத்தின் கீழ் ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 22,981 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 174,985 நபர்களுக்கும் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

சினாபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 203,515 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 18483 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 12 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 06 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மொடோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 2,490 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து இதுவரை 2,448,361 நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு பதிவு செய்துள்ளது.