83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி

Published By: Vishnu

03 Aug, 2021 | 08:37 AM
image

நாட்டில் படசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

கல்வியமைச்சரின் கூற்றுப்படி நேற்று காலை நிலவரப்படி மேல் மாகாணத்தில்  97% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மகாணத்தில் 95%,  மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 84%, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 83%, வட மாகாணத்தில் 82%, கிழக்கு மாகாணம் 74% , சப்ரகமுவ மாகாணத்தில் 52% ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் குறைந்தது முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகஸ்ட் இறுதிக்குள் ஆசிரியர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசிக்குப் பிறகு சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38