சமீபத்திய கோடை பயண நெருக்கடியில் திங்களன்று ஸ்பிரிட் மற்றும் அமெரிக்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான சேவை இரத்து மற்றும் தாமதங்களை எதிர்கொண்டன.

திங்களன்று 800 க்கும் மேற்பட்ட விமானங்களின் ச‍ேவையினை விமான நிறுவனங்கள் இரத்து செய்தன, மேலும் 1,000 க்கும் மேற்பட்டவை தாமதமாகின.

பாதகமான வானிலை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந் நிலைமை ஏற்பட்டதாக ஸ்பிரிட் ஏயர்லைன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஏ.பி.சி.செய்திச் சேவையிடம் கூறினார்.

ஸ்பிரிட் 313 விமானங்களை முன்கூட்டியே இரத்து செய்தது. இது அதன் தினசரி செயல்பாட்டில் 40 சதவீதமாகும்.

அதேநேரம் அமெரிக்கன் 529 விமானங்களை இரத்து செய்தது, இது அதன் தினசரி செயல்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும்.

இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், தமது அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.