(ஆர்.யசி)
இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் மோசமான தாக்கங்களை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், பொது நிகழ்வுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொவிட் கட்டுப்பாட்டு செயலணிக்கு வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையில், தற்போது நாடு திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்திடம் இது குறித்து வினவிய போதே தலைவர் உபுல் ரோஹன இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருமண நிகழ்வுகளில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது,
பொது நிகழ்வு கொத்தணியொன்று உருவாகிக்கொண்டுள்ளதை நாம் அவதானித்து வருகின்றோம்.
இது வேகமாக சமூக பரவலாக மாற்றமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே தற்போது உள்ள நிலைமையில் திருமண நிகழ்வுகள், ஏனைய மத, கலாசார நிகழ்வுகள், பொது நிகழ்வுகள் மற்றும் மரண நிகழ்வுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கான அறிவிப்பை நாம் கொவிட் செயலணிக் கூட்டத்தில் விடுத்துள்ளோம்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM