'மொனார்க்' சொகுசு தொடர்மாடி குடியிருப்பு விவகாரம்: ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை செப்டெம்பரில்

By J.G.Stephan

02 Aug, 2021 | 06:16 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க அர்ஜுன அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில், அவ்வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம்  திகதி முதல் முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகளான ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரும் மன்றில் ஆஜராகினர். ரவி கருணாநாயக்க சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியம் தொடர்பில், அதனை ஆராய தமக்கு சந்தர்ப்பம் வேண்டும் என கோரினார்.

இந்நிலையில் மன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜராகும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம, அக்கோரிக்கைக்கு அனுமதியளிக்குமாறும், இல்லையேல் இவ்வழக்கு தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்படும் நிலையே உருவாகும் எனவும் மன்றில் குறிப்பிட்டார். 

இந்நிலையில் சாட்சியாக முறைப்பாட்டாளர் தரப்பு முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ள கணிணி சாட்சிகளை ஆராய சட்டத்தரணிக்கு அனுமதியளித்தது.

  ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவருக்கும் எதிராக மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில், பேசுபொருளான மொனார்க் தொடர்மாடி சொகுசு குடியிருப்பை மையப்படுத்தி, இலஞ்ச  ஊழல் விசாரணை சட்டத்தின் 19 ( உ) பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலாம், 2 ஆம் பிரதிவாதிகளாக முறையே ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன அலோசியஸ் ஆகியோர் பெயரிடப்பட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர்...

2022-09-27 10:44:40
news-image

பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம்...

2022-09-27 10:02:47
news-image

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண புலம்பெயர் தொழிலாளர்களின்...

2022-09-27 10:34:18
news-image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு...

2022-09-27 10:26:41
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்...

2022-09-27 09:45:12
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-27 09:29:04
news-image

யாழ். நெல்லியடியில் 60 லீற்றர் கசிப்புடன்...

2022-09-27 10:16:46
news-image

வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின்...

2022-09-27 09:28:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29