சதீஷ் கிருஷ்ணபிள்ளை

ஒரு கிராமம் இருக்கிறது. இரு பண்ணையார்கள் வாழ்கிறார்கள். தமது கட்டுப்பாட்டில் கிராமம் இருப்பதை இரு பண்ணையார்களும் விரும்புவார்கள். பண்ணையார்கள் அல்லவா? அதற்குரிய போட்டி, பொறாமை, அதிகாரப் போராட்டம், மற்றவர்களை வளைத்துப் போட்டு ஆதாயம் காண முனைவது என்ற ரீதியில் எல்லாமே இருக்கும்.

இங்கு நடுத்தர குடியானவனின் குடும்பம். அவனது காணியில் இருந்து முதல் பண்ணையார் தூரத்தில் இருப்பார். இரண்டாவது பண்ணையார் அயலவர். குடியானவன் இரு பண்ணையார்களையும் சமாளிக்க வேண்டும். அப்போது தான் வாழலாம். 

இருவருமே குடியானவனை தமது தேவைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள். குடியானவனுக்கு தூரத்தில் உள்ள பண்ணையாரை அவ்வளவாக பிடிக்காது. பண்ணையார் தமது பகையாளியை ஆதரிக்கிறார் என்பதால் அவ்வாறு இருக்கலாம். 

அதற்காக, குடியானவன் அயலில் உள்ள பண்ணையாருடன் உறவு பாராட்டுவான். அந்தப் பண்ணையார் தமது பகையாளியின் பகையாளி என்பது குடியானவனுக்குத் தெரியும்.

தூரத்தில் உள்ள பண்ணையாருக்கு குடியானவனை வைத்து அரசியல் செய்ய வேண்டும். அருகில் உள்ள பண்ணையாருக்கு குடியானவனின் காணியில் ஒரு கண். அந்தக் காணியை தமக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தினால் இலாபம் சம்பாதிக்கலாம். 

குடியானவனை கைக்குள் போட்டுக் கொண்டு, அவனது ரோடு போட்டால் இன்னொரு குடும்பத்தவனின் காணிக்கு இலகுவாக சென்று வியாபாரம் பண்ணலாம்.

ஆக, குடியானவனுக்கும் இரு பண்ணையாளர்களுக்கும் இடையிலான உறவில் அன்பு கிடையாது. சுயநலம் உண்டு. சுயநலமான உறவுகள் என்றால், போலித்தனமும், பாசாங்கும் அவசியம் அல்லவா? அதுதான்.

எங்கோ கேட்ட கதைபோல இருக்கிறதா? குடியானவனை பாகிஸ்தானாகவும், பண்ணையார்களை அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளாகவும் உருவகித்துப் பாருங்கள். கதை புரியும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.