சுபத்ரா

“அவுஸ்ரேலியாவைப் பொறுத்தவரையில், தமது நாட்டை நோக்கி இலங்கையில் இருந்து எந்தவொரு படகும் புறப்பட்டு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்காகவே உபகரணங்களை அள்ளிவழங்குகின்றது”

அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இலங்கையுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று வரும்போது, மனித உரிமை கரிசனைகளைப் பெரும்பாலும், கவனத்தில் கொள்வதில்லை.

இலங்கைப் படையினர் மீது போர்க்குற்றம் சாட்டுகின்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற அமெரிக்கா - இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலில் எந்த சமரசத்தையும் செய்து கொள்வதில்லை.

இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவை உருவாக்கி பலப்படுத்துவதிலும், ஆழ்கடல் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதிலும் அமெரிக்கா அதிக பங்களிப்பைச் செய்திருக்கிறது.

இலங்கை கடற்படையிடம் உள்ள சமுத்ர மற்றும் கஜபாகு ஆகிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்கள்  அமெரிக்கா வழங்கியவை தான்.

அத்துடன் விமானப்படையிடம் உள்ள பீச் கிங் கண்காணிப்பு விமானம் அமெரிக்காவிடம் பெறப்பட்டது என்பதுடன், அதில் பொருத்தப்பட்டுள்ள நிகழ்நிலை கண்காணிப்பு தொகுதிகளும் அமெரிக்கா கொடையாக வழங்கியவை தான்.

மனித உரிமை கரிசனைகளுக்கு அப்பாற்பட்ட வகையிலேயே - இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துதல், இலங்கை கடற்படையுடன் நெருங்கிய தொடர்பை பேணுதல் போன்ற ஒத்துழைப்புகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது.

அதுபோலவே, அகதிகள் விடயத்தில் ஈவிரக்கமற்ற கொள்கையை கொண்டுள்ள அவுஸ்ரேலியாவுக்கும் கூட, இந்த விடயத்தில் மனித உரிமைகள் என்ற விடயத்தை ஒருபோதும் கவனத்தில் கொள்வதில்லை.

அவுஸ்ரேலியாவின் கடல் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், அகதிகள் படகுகளின் வருகையைத் தடுப்பதற்கும் எந்த எல்லைக்குச் செல்வதற்கும் அவுஸ்ரேலியா தயாராக இருக்கிறது.

அதற்காக பேயுடன் கூட கூட்டுச் சேருவதற்கு அவுஸ்ரேலியா தயார் நிலையில் உள்ளது.

அவ்வாறான ஒரு ஒத்துழைப்புத்தான், இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் இருந்து வருகிறது.

அண்மையில், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைக் கண்காணிக்கின்ற ஒரு கருவித் தொகுதியை இலங்கைக்கு அவுஸ்ரேலியா கொடையாக வழங்கியிருக்கிறது.

இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேரடியாக கையளித்திருந்தார் அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹொலி.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.