2 மணிநேரத்தின் பின் வழமைக்கு திரும்பிய நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி போக்குவரத்து 

By T Yuwaraj

02 Aug, 2021 | 05:18 PM
image

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் முறிந்து விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து 02.08.2021 அன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் மதியம் ஒரு மணியளவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.

இதனால் மரத்தை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை ஹட்டனிலிருந்து நுவரெலியா செல்லும் அதேபோல நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், கொட்டகலை பிரதேச சபையினரும், தோட்ட பொது மக்கள் மற்றும் பத்தனை பொலிஸாரும் இணைந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 3 மணியளவில் மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்டது.

எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மரம் முறிந்து விழும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53