சத்ரியன்
கொரோனாவையும், அதற்கான தடுப்பூசியையும், மையப்படுத்திய அரசியல் நகர்வுகள் தீவிரம் பெற்றிருக்கின்ற நிலையில், நான்காவது அலை பற்றிய அச்சமும் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மூன்றாவது அலையின் இறுதியில் – நான்காவது அலையில் தொடக்க கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்று இலங்கை மருத்துவச் சங்கத்தின் தலைவர், மருத்துவர் பத்மா குணரத்ன செய்தியாளர்களிடம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
அதற்கு அடுத்தநாள், அதனை நிராகரித்து சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.
இன்னமும் மூன்றாவது அலையில்தான் இருந்து கொண்டிருக்கிறோம், நான்காவது அலை பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இல்லை என்று அவர்கள் மறுத்திருந்தார்கள்.
ஆனால், அடுத்தடுத்த நாட்களிலேயே சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளான மருத்துவர்கள், அசேல குணவர்த்தனவும், ஹேமந்த ஹேரத்தும் டெல்டா பரவல் பற்றியும், அதிகரிக்கும் தொற்றுகள் குறித்தும் எச்சரிக்கைகளை விடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
டெல்டா தொற்று நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என்பது அவர்களின் ஆகப் பிந்திய கருத்து.
டெல்டா என்பது முன்னைய கொரோனா தொற்றுகளை விட பல மடங்கு வீரியமும் தீவிரமாகப் பரவும் ஆற்றலும் கொண்டது.
டெல்டா தொற்று எல்லா மாவட்டங்களிலும் பரவியிருந்தால், அது இப்போது பல்கிப் பெருகியிருக்கும்.
ஆனால் மட்டுப்படுத்தப்பட்டளவு பிசிஆர் சோதனைகளே நடத்தப்பட்டு வருவதால், தொற்றாளர்களை கண்டுபிடிக்கப்படுவது குறைவாக இருக்கிறதே தவிர, முழு அளவில் பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டால் தான் உண்மையான நிலைவரம் தெரியவரும்.
மூன்றாவது அலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோலத் தான் நான்காவது அலை பற்றிய அச்சுறுத்தலும் உள்ளது.
இலங்கையைப் போலவே தான், கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவியது.
மே 12ஆம் திகதியில் இருந்து மே 29ஆம் திகதி வரையான காலம் தான் தமிழகத்தில் உச்சக்கட்ட தொற்றாளர்கள் பதிவாகினர்.
அந்தக் காலகட்டத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
மே 21ஆம் திகதி அதிகபட்சமாக 36 ஆயிரத்து 184 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-7
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM