லோகன் பரமசாமி
தெற்காசியாவின் வட பிராந்திய அரசியல் நிலைமைகள் மிக விரைவான மாற்றங்களைக் கண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க உள்ளிட்ட கூட்டு நாடுகளின் படைகள் வெளியேறிக் கொண்டிருக்கும் அதேவேளை தலிபான்களின் தாக்குதல்கள் மிகக் கூர்மை அடைந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் படைகள் விலகிய இடங்களை மிக வேகமாக கைப்பற்றி வரும் தலிபான்கள் மேற்கு நாடுகளுக்கு சாதகமாக செயற்பட்டவர்கள் மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள் என்று பலரையும் பழிவாங்கி வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதேவேளை தலிபான்களின் சில உறுப்பினர்கள் ஈரானில் புதிய வரவேற்பை பெற்றிருக்கின்றனர் என்பதையும் பாகிஸ்தானிய இராணுவத்தினர் வெளிப்படையாக தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
பாகிஸ்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.எஸ் தலிபான்களுக்கு தேவையான ஆயுத தளபாட உதவிகளை செய்து வருவதாக புதுடெல்லி அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையேயான அரசியலில் 1989 ஆம் ஆண்டு நிகழ்ந்த அதே மாற்றங்கள் தற்பொழுது, அதாவது அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகும் பொழுது நிகழும் என்று சில ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேறியதும் பாகிஸ்தானில் நிலைகொண்டு போராடி வந்த ஆப்கான் போராட்டகாரர்களை ஐ.எஸ்.ஐஸ் நிறுவனம் இந்தியா நோக்கி திசை திருப்பி விட்டது. இதனால் காஷ்மீரில் பலத்த போராட்டங்களும் துப்பாக்கி முனைத் தாக்குதல்களும் இடம்பெற்றன.
இது காஷ்மீரிய விடுதலைப் போராட்டத்தை மேலும் கொந்தளிப்பு நிலைக்கு தள்ளி விட்டது. பாகிஸ்தானிய எல்லையான கட்டுப்பாட்டு கோட்டிற்கு அப்பால் இந்தியப் பகுதிக்குள் போராளிகள் புகுந்து காஷ்மீர் பள்ளத்தாக்கினுள் பாரிய போராட்டங்களை நடத்தினர். 1990களில் பெருவாரியான இந்தியப் படையினர் காஷ்மீர் பகுதிகளில் உயிரிழந்தனர்.
இதேபோன்று மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்று முழுதான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமிடத்தது காஷ்மிர் போராட்டம் மீண்டும் தலை எடுக்குமா? என்று புதுடெல்லிக்கு சந்தேகம் ஏற்படவே செய்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/varthaka-ula/2021-08-01#page-7
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM