ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாகிஸ்தானின் தீய திட்டங்கள்

By Digital Desk 2

02 Aug, 2021 | 03:02 PM
image

ஏ.என்.ஐ

ஐரோப்பா முழுவதும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் குறித்த தகவல்கள் ட்விட்டர்  தளம் ஊடாக கசிந்துள்ளது.  இந்த திட்டமானது பாகிஸ்தான் தனது பன்னாட்டு தூதரகங்கள் ஊடாக கையாளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு திட்டமானது எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி 'யோம்-இ-இஸ்தெஹ்சால்' (ஒடுக்குமுறை நாள்) என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரச்சாரத்தின் நோக்கம் அனைத்து நவீன டிஜிட்டல் மீடியா தளங்களையும் பாரம்பரிய எதிர்ப்புகளுடன் இணைந்து அதிகபட்ச பிரச்சார தாக்கத்தை உருவாக்குவதாகும்.

இந்தியாவுக்கு எதிராக இந்து எதிர்ப்பு ,இரு தேச கோட்பாடு போன்ற பிரச்சாரங்களை மேற்குலக நாடுகளில் முன்னெடுத்தல் மற்றும் காஷ்மீர் மீதான கற்பனை போன்றவையை மையப்படுத்தியதாகவே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் அமைந்துள்ளதுடன் அனைத்து விதமான டிஜிட்டல் மற்றும் பாரம்பரிய ஊடக முறைகளை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் அனைத்து செயல்களையும் ஒருங்கிணைப்பதற்கும், ' காஷ்மீருக்கான சர்வதேச சிவப்பு கூட்டணி ' என்ற பெயரில் ஒரு  அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி விழிப்புணர்வு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான ட்விட்டர்  பதிவுகள் என பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

போராடும் காஷ்மீரிகளுக்கு ஒற்றுமையைக் காட்டும் ஒரு நாள், காஷ்மீரின் எதிர்காலம் பாகிஸ்தானுடன் உள்ளது, காஷ்மீர் பாகிஸ்தானின் ஜுகுலர் நரம்பு என்ற தொனிப்பொருளிலும் இந்த  போராட்டங்கள்  முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வகையான பரப்புரைகள் மொத்தம் இருபது தரப்படுத்தப்பட்ட ட்வீட்ஸ் செய்திகளாக ஆங்கிலம் , ரோமன் , உருது போன்ற மொழிகளில் பதிவேற்றப்படுகின்றன.

ஜூலை 26 திகதியன்று சட்டமன்றத் தேர்தலுக்கு மறுநாள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நீலம் பள்ளத்தாக்கின் இடம்பெற்ற சம்வமொன்றில் துணை இராணுவப் படையினரால் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதுடன் 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வாறு பல சம்பவங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெறுகின்றன.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 திகதி இந்திய அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவு இரத்து செய்யப்பட்டது . குடியிருப்பாளர்களை திருமணம் செய்யாத பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான பாகுபாடு ஒழிக்கப்பட்டு, தனியார் முதலீடுகள் பெருகத் தொடங்கிய நாள் அது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான தார்மீக மற்றும் சட்டப் போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாற்றங்களை வலியுறுத்தி தற்போதைய அமைதியை ஆதரித்த எழுத்தாளரும் மனித உரிமைகள் செயற்பட்டாளருமான கலாநிதி அம்ஐத் அயூப் மிர்சா அச்சுறுத்தப்பட்ட நிலையில் தற்போது இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33