டோக்கியோ ஒலிம்பிக்கில் நடுவராக பணியாற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்

Published By: Digital Desk 2

02 Aug, 2021 | 01:58 PM
image

ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில்  தமிழ் திரைப்பட இயக்குனரான பாஸ்கர் சீனிவாசன் நடுவராக பணியாற்றுகிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் 2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'கைலா'. இப்படத்தை இயக்கியதுடன் வில்லனாகவும் நடித்தவர் இயக்குனர் பாஸ்கர் சீனிவாசன். திரைப்பட இயக்குனராக இருந்தாலும் இவர் கராத்தே எனும் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்.

புதுச்சேரியில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்த இவர் உலக கராத்தே கழகத்தில் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். கராத்தே போட்டிக்கான ஆசியாவின் நடுவர் ஆணைய உறுப்பினராகவும், தெற்காசிய நாடுகளின் நடுவர் ஆணைய தலைவராகவும், பொதுவலய நாடுகளின் நடுவர் ஆணையத்தின் உறுப்பினராகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் கராத்தே கழகத்தில் நடுவர் ஆணைய உறுப்பினராகவும், இந்திய கராத்தே கழகத்தில் முன்னாள் நடுவர் ஆணைய தலைவராகவும் பணியாற்றியவர். இவர் தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் கராத்தே போட்டிக்கான நடுவராக பணியாற்ற தெரிவாகி இருக்கிறார்.

இதுதொடர்பாக பாஸ்கர் சீனுவாசன் பேசுகையில்,

' டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் கராத்தே போட்டிக்கான நடுவராக தெரிவுச் செய்யப்பட்டிருக்கிறேன். என்னுடன் 16 மூத்த வீரர்கள் நடுவர்களாக பணியாற்றவிருக்கிறார்கள்.

இந்த கொரோனாக் காலகட்டத்திலும் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற சர்வதேச நடுவருக்கான போட்டித் தேர்வில் பங்கு பற்றினேன்.

அதில் தேர்ச்சி அடைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலமாக ஒலிம்பிக் போட்டியில் நடுவராக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன்.

இதற்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக செயல்பட வேண்டியது குறித்து எம்முடன் தெரிவு செய்யப்பட்ட 16 நடுவர்களுக்கும் சிறப்பு பயிற்சி பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் நடைபெற்றது .

அதன் பின்னர் தற்போது டோக்கியோவின் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கராத்தே போட்டிக்கு நடுவராக பணியாற்றுகிறேன்.  போட்டி நிறைவடைந்து இந்தியாவிற்கு திருமபியதும் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிடவிருக்கிறேன். ' என்றார்.

ஒலிம்பிக் போட்டியில் கராத்தே பிரிவில் நடுவராக தமிழர் ஒருவர் பணியாற்றுவது பெருமை தரும் விடயம் என்பதால் அவருக்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட்...

2024-10-03 17:13:20
news-image

இம்மாதம் வெளியாகும் விமல் - சூரி...

2024-10-03 17:12:49
news-image

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் பொலிவூட் நடிகர் ...

2024-10-02 09:48:58
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்'...

2024-10-01 16:54:50
news-image

ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-10-01 16:54:24
news-image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96...

2024-10-01 13:44:11
news-image

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி!

2024-10-01 11:58:55
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் கிளர்வோட்டம்...

2024-09-30 17:00:16
news-image

நடிகை இனியா மூன்று கெட்டப்புகளில் நடித்திருக்கும்...

2024-09-30 17:00:40
news-image

மாற்று பாலினத்தை சார்ந்த சம்யுக்தா விஜயன்...

2024-09-30 16:34:30
news-image

ஹாட்ரிக் வெற்றியை வழங்குவாரா நடிகர் மணிகண்டன்...!!?

2024-09-30 16:34:13
news-image

ஹிட்லர் - திரைப்பட விமர்சனம்

2024-09-28 18:19:31