உண்மைகள் புதைக்கப்படக்கூடாது

Published By: Gayathri

02 Aug, 2021 | 01:55 PM
image

எம்.எஸ்.தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்னன. 

அத்தோடு, மரணித்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று பல்வேறு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. 

ஆயினும், ரிஷாத் பதியுதீனின் குடும்பத்தினர் சட்டத்தை வளைத்து, அதிலிருந்து தப்பிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன. 

ஆனால், இவ்விவகாரத்தில் ரிஷாத்; பதியுதீன் தரப்பினரால் சட்டத்தை வளைக்க முடியாது. ஏனெனில், ரிஷாத்; பதியுதீனே தனக்கு நீதி வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வாறு சட்டத்தை வளைக்க முடியும்? என்பது கேள்வியாகின்றது.

மேலும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கும், ரிஷாத் பதியுதீனுக்கும் இடையிலான உறவுகளின் நிலை எத்தகையது என்பதனை சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

அவர் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையல்ல. அதிகாரித்தில் இருப்பவரும் அல்ல. வெறும் மக்கள் பிரதிநிதி மட்டுமே.

ஹிஷாலினிக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரைக்கும் ஹிஷாலினி தற்கொலை செய்து கொண்டார் என்றோ அவர் கொலை செய்யப்பட்டார் என்றோ உறுதியாக கூற முடியாது.

 

இந்த விவகாரத்தில் பொது அமைப்புக்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதில் குற்றம் காண முடியாது. 

சந்தேகத்தின் பேரில் ரிஷாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தகப்பன், மனைவியின் சகோதரர், தரகர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுகின்றன. 

ஹிஷாலினிக்கு நீதி வேண்டி மலையகக் கட்சிகளும் வீதிக்கு இறங்கியுள்ளன. 

ஆனால், ஹிஷாலினி போன்ற மலையகப் பெண் பிள்ளைகளும், ஆண்பிள்ளைகள் பலரும் கல்வி கற்க வேண்டிய வயதில் பெற்றோர்களினால் வேலைக்கு அனுப்பப்படுகின்றார்கள்.

இதற்குரிய காரணத்தை அடையாளம் காணவேண்டும். போதிய வருமானம் இல்லாததால்தான் இவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களை நியாயப்படுத்த முடியாது.

ஹிஷாலினிக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் கல்வி கற்கும் வயதுப் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று குரல் கொடுக்கவில்லை. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக பொருளாதாரம் மூச்சு விடும் இடைவெளி...

2026-04-11 10:20:43
news-image

ஈரான் சண்டைகளில் தோற்கலாம், ஆனால் போரில்...

2026-04-10 09:00:17
news-image

திகிலூட்டிய செவ்வாய்க்கிழமை இரவு விடியும்வேளையில் மலர்ந்த...

2026-04-09 11:53:27
news-image

அமெரிக்கா தலைமையிலான ஈரான் மீதான படையெடுப்பில்...

2026-04-09 10:09:54
news-image

மத்திய கிழக்கு போர் நெருக்கடியும் இலங்கையின்...

2026-04-08 15:21:39
news-image

இலங்கையை வாட்டும் கடும் வெப்ப அலை...

2026-04-08 14:24:23
news-image

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பும் இறையாண்மையும்

2026-04-07 10:43:55
news-image

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் விசாரணை...

2026-04-07 10:22:03
news-image

மத்திய கிழக்குப் போரினால் அதிக விலை...

2026-04-06 12:51:43
news-image

நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேற டொனால்ட் ட்ரம்ப்...

2026-04-06 09:27:14
news-image

அமெரிக்கா: ஜனநாயகம் சோதனைக்கு உட்படுத்தப்படும் பரிசோதனைக்கூடம்

2026-04-05 14:23:21
news-image

ட்ரம்பின் யுத்த நிறுத்த யோசனையை நிராகரித்து...

2026-04-05 14:15:49