மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இலங்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் எம்.பி. ஒருவர்  முன்னாள்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் அவர் மௌனம் சாதித்ததை அவர் மறந்துவிடக் கூடாது  என்று திறனபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியா சென்றிருந்த போது அவரை இலக்கு வைத்தாக குறிப்பிடப்படும் கும்பல் ஒன்று அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்சார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.  

இதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்சாரின் மீதான தாக்குதல் எமது நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என குறிப்பட்டுள்ளார். ஆனால் அவரின் ஆட்சிகாலத்தில் அமைச்சராக இருந்தமுன்னாள் எம்.பி. ஒருவர்  முன்னாள்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் அவர் மௌனம் சாதித்ததை அவர் மறந்துவிடக் கூடாது.

எவ்வாறாயினும் மலேசிய அரசாங்கம் தற்போது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பிலான உண்மை தன்மையக் விரைவில் வெளிவரும் என்றார்.