கபில்

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தமிழர் விரோதப் போக்கு அல்லது தமிழர்கள் ஓரங்கட்டப்படுகின்ற போக்கு தீவிரமடைந்து வருகிறது.

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக சமன் பந்துலசேனவின் நியமனம் தொடர்பான சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் அடங்க முன்னரே, யாழ்ப்பாண மாவட்டத்துக்கு தமிழ் தெரியாத சிங்கள அரச அதிபர் ஒருவரை நியமிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும், பிரதேச செயலர்களாக நியமிக்கப்படுவதற்கு சிங்கள அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வடக்கு மாகாணம் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசம். அந்த வகையில் தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகக் கூடிய தமிழ் பேசும் ஒருவரை பிரதம செயலாளர் பதவியில் நியமிப்பது தான் பொருத்தமானது.

பிரதம செயலாளர் பதவிக்கு நியமிக்கத் தகைமை பெற்ற  12 உயர் அதிகாரிகள் மாகாணசபையில் இருந்தபோதும், வெளியே இருந்து ஒரு சிங்கள அதிகாரியை, அந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார் ஜனாதிபதி.

இதற்கு தமிழ் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், இந்த நியமன முடிவை மாற்றுமாறு வட மாகாணசபையின் அவைத் தலைவர், முன்னாள் முதல்வர்,  முன்னாள் உறுப்பினர்கள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவும் தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும், பிரதம செயலாளராக சமன் பந்துலசேன, பௌத்த பிக்குகள் புடை சூழச் சென்று பதவியை ஏற்றுக் கொண்டமை, நல்லதொரு சமிக்ஞையை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கவில்லை.

இது ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்க நிலைப்பாட்டைத் தான் வெளிக்காட்டியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.