வனிந்து ஹசரங்க 2021 ஐ.பி.எல். தொடரின் இரண்டாம் பாதியில் மாற்று வீரராக இணைத்துக் கொள்ளப்பட பல அணியின் உரிமையாளர்களிடமிருந்து அழைப்பினை பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக, மன உறுதி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் உயிரியல் குமிழி காரணமாக செப்டம்பர் 19 முதல் தொடங்கும் 2021 ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பல சர்வதேச வீரர்கள் வெளியேற வாய்ப்புள்ளது.

இந் நிலையில் ஐ.பி.எல். உரிமையாளர்கள் இந்தியாவிற்கு எதிரான அற்புதமான ஆட்டங்களுக்குப் பிறகு வனிந்து ஹசரங்காவை மாற்று வீரராகக் அணியில் இணைத்துக் கொள்ள கவனம் செலுத்தியுள்ளதாகவும் சேவாக் மேலும் கூறினார்.

குறிப்பாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏற்கனவே பி.சி.சி.ஐ. அணுகி அடம் ஜாம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணையில் இணைத்துக் கொள்ள கோரியிருந்தது.

ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனும் ரோயல் செலஞ்சர்ஸ் அணியிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐ.பி.எல். ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஹசரங்கவுக்கு அதிகளவில் உள்ளதாகவும் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.