வடக்கு கலிபோர்னியாவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேக்ரமெண்டோவுக்கு வடமேற்கே 70 மைல் தொலைவில் உள்ள கொலூசா என்ற சிறிய நகரத்தில் இந்த ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரோபின்சன் ஆர் 66 என்ற ஹெலிகொப்டரே விபத்துக்குள்ளானதாக அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்துடன் விபத்து குறித்து விசாரணை செய்யும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையகம் கூறியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாவில்லை.