முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் தொழில் செய்த நிலையில் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு பேரணி ஒன்று 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கொட்டகலை பகுதியில் நடைபெற்றது.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் இந்த கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

குறித்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், என சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இங்கு பொதுமக்களுக்கான தெளிவூட்டல் கூட்டம் ஒன்று சட்டத்தரணி நேரு கருணாகரனால் நடாத்தப்பட்டதுடன் இங்கு பொது மக்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.