டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அதிகேவ வீரர் யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் முதலிடம் பெற்று சாதனைப் படைத்தார்.
இதில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவெனில் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் கோளோச்சிய தற்போதும் அதிவேக வீரராக உள்ள ஜமைக்காவின் உசைன் போல்ட் இல்லாத 100 மீற்றர் ஓட்டமாக இது அமைந்ததோடு ஜமைக்கா நாட்டின் எந்தவொரு வீரரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற வில்லை என்பதும் அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமன்றி தடகள ரசிகர்கள் அனைவக்கும் கூட பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
32ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர் ஓட்டப் போட்டி இரவு ஜப்பான் நேரப்பட்டி 9,50 மணிக்கு நடைபெற்றது.
இதில் இத்தாலியின் ஜேக்கப்ஸ் லாமண்ட் மார்செல் 9.80 செக்கன்களில் பந்தயத் தூரத்தை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
ஆனால் இது ஒலிம்பிக்கின் சிறந்த ஓட்ட நேரம் அல்ல. இதில் அமெரிக்க வீரர் கேர்லி 9.84 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாமிடத்தை வென்றெடுக்க மூன்றாமிடத்தை கனடாவின் கிராஸ்ட் அணட்ரே வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 9.89 செக்கன்களில் ஓடி முடித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM