இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் மெக்ஸ்வலின் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் ஆஸி அணி 263 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

டி20 போட்டியொன்றில் அணி ஒன்றினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்டத்தினை ஆஸி அணி இன்று பதிவுசெய்துள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை அணி டி20 போட்டியில் கென்யா அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட 260 ஓட்டங்களே அதிக ஓட்ட எண்ணிக்கையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸி அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மெக்ஸ்வல் 145 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 264 ஓட்டங்களை பெறவேண்டும்.