கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும்: எஸ்.பி.திஸாநாயக்க

Published By: J.G.Stephan

01 Aug, 2021 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம்  பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களைணஅடிப்படையாகக் கொண்டு  இச்சட்டமூலம் தொடர்பில்  எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில், உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைப்பதில்லை.  ஒவ்வொரு வருடமும் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் - 35 ஆயிரம் வரையிலான மாணவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது.

 வசதி உள்ள மாணவர்கள் அதிக பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்கள்.  ஏனைய மாணவர்களுக்கு பட்டப்படிப்பு என்பது வெறும் கனவாக அமைந்து விடுகிறது. இவ்வாறான நிலையில் இலவச கல்வி  முழுமையடையவில்லை என்றே கருத வேண்டும்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி வழங்கல் என்பது சுபீட்சமான கொள்கையாக காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழக கல்லூரிகளை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56