சிவலிங்கம் சிவகுமாரன்
நாடில்லை, வீடில்லை, தமக்கென ஒரு தேசிய கீதமோ கொடிகளோ இல்லை. இப்படியானவர்கள் அகதிகள் என வரையறை செய்யப்படுகின்றனர்.
பல்வேறு காரணங்களுக்காக சொந்த நாட்டிலிருந்து வெளியேறுபவர்களை உலகின் பல நாடுகள் அகதிகளாகக் கூட ஏற்றுக்கொள்வதில்லை.
ஆனால் அப்படியானவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் குழு.
அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்று வரும் ‘2020 ஒலிம்பிக்’ போட்டிகளில் இரண்டாவது தடவையாக பங்கேற்றுள்ளனர் அகதிகளாக உள்ள விளையாட்டு வீரர்கள்.
முதன் முதலாக இவ்வாறான அகதி வீரர்கள் 2016 ஆம் ஆண்டு பிரேசில் ரியோடி ஜெனீரோவில் இடம்பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், உலகம் முழுவதும் அகதிகளாக இருப்பவர்களின் அடையாளங்களாக பங்கேற்று சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை அழுத்தமாகக் கூறினர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட இவர்களை அகதி விளையாட்டு வீரர்கள் (Refugee athletes) என்றே குறிப்பிட்டது.
இந்த நிகழ்வில் பத்து அகதி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பூகோள ரீதியாக இன்று அகதிகளுக்கு உருவாகியுள்ள நெருக்கடிகளை வெளிப்படுத்தும் அதேவேளை, இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன? என்ற கேள்விகளை அனைவர் மனதிலும் எழுப்புவதாக அமைந்தது இவர்களது இந்த அதிரடி பிரவேசம்.
ஒலிம்பிக் கொடியை ஏந்தியவண்ணம் இவர்கள் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை பலரினதும் கவனத்தை ஈர்த்தது.
கொங்கோ,தெற்கு சூடான், எதியோப்பியா, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 ஆண்களும் 4 பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.
தற்போது டோக்கியோவில் ஆரம்பித்துள்ள 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் இந்த அகதி விளையாட்டு வீரர்கள் குழாமில் 29 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இவர்கள் சிரியா, தெற்கு சூடான், ஈரான், ஆப்கானிஸ்தான், எரித்ரியா, வெனிசுவேலா, கெமரூன், கொங்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 10 பேர் பெண்களாவர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என்பது ஒரு பூகோள அமைப்பாகும். விளையாட்டு மூலம் சிறந்ததோர் உலகை உருவாக்குதல் என்பதே இந்த அமைப்பின் தொலைநோக்காக உள்ளது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-01#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM